பழக்காரம்மா... பாஜகவுக்கு ஓட்டை பாத்து போடுங்க - தமிழிசை பிரசாரம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனை ஆதரித்து தண்டையார்பேட்டை மார்க்கெட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை: ஆர்.கே. நகரில் காய்கறி கடை, மார்க்கெட் சிறு வியாபாரிகளிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் என 5 முனை போட்டி நிலவுகிறது.
கடைசியாக கரு நாகராஜனை வேட்பாளரை அறிவித்தாலும், முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக.

முழுவீச்சில் பாஜக
ஆளும் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது என்பது தமிழிசை சவுந்தரராஜனின் புகார். நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, சாலை மறியல் செய்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி, வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுடன் இணைந்து புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

பரிசுப்பொருட்கள்
பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதற்காக டோக்கன் கொடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப் பகலில் பணப் பட்டுவாடா நடைபெறும்நிலையில், தேர்தல் நடத்திப் பலனில்லை என்றார் தமிழிசை சவுந்தராஜன்.

பழக்காரக்கா பாஜகவிற்கு ஓட்டு
தமிழிசையின் ஆக்ரோச அட்டென்சன் பேட்டி நேற்று ஒளிபரப்பான நிலையில் இன்று அமைதியாக தண்டையார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பழம், காய்கறி கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார். பழக்காரக்கா... தாமரைக்கு மறக்காம ஓட்டு போடணும் என்று கேட்டார்.

திறந்த ஜீப்பில் வாக்கு சேகரிப்பு
ஆர்.கே. நகரில் பாஜக அதிக அளவில் வாக்குகளைப் பெறும் என்று வேட்பாளருக்கு நம்பிக்கை அளித்து தமிழிசை சவுந்தரராஜன் திறந்த ஜீப்பில் பம்பரமாக சுற்றி வந்து வாக்கு சேகரிக்கிறார். பாஜகவிற்கு கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்தே தமிழகத்தில் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications