மரக்காணம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிம்புவின் அத்தை மகன் உள்பட 4 பேர் பலி
விழுப்புரம்: மரக்காணம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் இயக்குனர் டி. ராஜேந்தரின் தங்கை மகன் உள்பட 4 பேர் பலியாகினர்.
இயக்குனர் டி. ராஜேந்தரின் தங்கை மகன் ஆதிகுரு(22). மயிலாடுதுறையைச் சேர்ந்த அவர் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்றார். அவர் இன்று அதிகாலை தனது உறவினர்கள் பிரியதர்ஷினி(29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன்(52) ஆகியோருடன் டாடா இன்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு கிளம்பினார்.
காரை விஜயராகவன் ஓட்டி வந்தார். கார் அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கும் செட்டிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஆதிகுருவின் காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயகுரு, மற்றொரு காரில் இருந்த சுரேஷ்குமார்(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். புதுச்சேரியை நோக்கி வந்த காரில் இருந்த சுரேஷ் குமாரின் தாய் செந்தமிழ், டிரைவர் பாக்கியராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 முடித்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிதிருந்தார். இதற்கிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications