கருணாநிதி பெயரில் புதிய சாலை.. வெண்கலச் சிலை.. புதுச்சேரி அறிவிப்பு
காரைக்காலில் அமைய உள்ள புதிய சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
புதுச்சேரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், காரைக்காலில் புதிய மேற்கு புறவழிச் சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் மறைவையொட்டி புதுச்சேரியில் பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், காரைக்காலில் அமையவுள்ள புதிய மேற்கு புற வழி சாலைக்கு, அவருடைய பெயர் வைக்கப்படும் என, புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலையும் வைக்கப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications