''அம்மா....அம்மா''.... ஆர்ப்பரிக்கும் கூட்டம்.. இடியென முழங்கும் ஜெயலலிதா.... !

Subscribe to Oneindia Tamil

சென்னை: அது வேற அம்மா.. இது சூப்பர் அம்மா.. இப்படித்தான் சொல்கிறார்கள் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.. காரணம் இது வரை செய்து வந்த பிரசார உத்தியை விட்டு விட்டு புதுப் பொலிவுடன் தமிழகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி ஜெயலலிதா.

முன்பெல்லாம் வேனுக்குள் உட்கார்ந்தபடி அட்டைகளை அடுக்கிய பிரசார பேச்சுக்களை வாசித்து வாசித்து சென்று கொண்டிருந்த ஜெயலலிதா இந்த தேர்தலில் வேனை விட்டு இறங்கி நேராக மேடையில் ஏறி பெண் சிங்கம் போல கர்ஜித்து வருகிறார்.

ஹெலிகாப்டரில் தான் வந்து போகிறார் என்றாலும் அவரது பிரசார பேச்சிலும் கூட மாற்றம்.. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று அவர் அடித்துக் கேட்பது பிரபலமாகி விட்டது. அதே பாணியில் அல்லது அதை ஒட்டியே மற்ற தலைவர்களும் பேசும் நிலைக்குத் தள்ளி விட்டு விட்டது.

பொட்டில் அடித்தாற் போல

பொட்டில் அடித்தாற் போல

பொட்டில் அடித்தாற் போல தனது பேச்சின்போது எதிர்க்கட்சிகளை வர்ணிக்கிறார் ஜெயலலிதா. அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் ஜெயலலிதா.

செய்வீர்களா.. செய்வோம்...

செய்வீர்களா.. செய்வோம்...

முன்பு போல இப்போதும் எழுதியதைத்தான் ஜெயலலிதா படிக்கிறார் என்ற போதிலும் பேச்சில் அதிக தெளிவு இருக்கிறது. தனது பேச்சின்போது அவர் இடைஇடையே உரத்த குரலில் செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று கேட்கும்போது கூட்டமே ஒரே குரலில் செய்வோம் என்று முழங்குகிறது.

பாடம் புகட்டுங்கள்

பாடம் புகட்டுங்கள்

திமுகவையும், காங்கிரஸையும், இப்போது பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார் ஜெயலலிதா. பாடம் புகட்டுங்கள் என்றுஅவர் ஆவேசமாக கூறும்போது கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.

மாற்றுக் கட்சியினருக்கும் அடைக்கலம்

மாற்றுக் கட்சியினருக்கும் அடைக்கலம்

கூட்டங்களுக்குச் செல்லும்போது மாற்றுக் கட்சியினர் பெரும் திரளாக ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைகின்றனர். அவர்களையும் புன்னகையுடன் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா.

திராணி இருக்கிறதா...?

திராணி இருக்கிறதா...?

எதிர்க்கட்சியினரை ஜெயலலிதா விமர்சிக்கும்போது அவர்கள் மீதான குர்றச்சாட்டுக்களைப் பட்டியல் போட்டு விலாவாரியாக படிக்கிறார். விவாதத்திற்கு வருகிறீர்களா. அதற்குத் திராணி இருக்கிறதா என்று போட்டுத் தாளிக்கிறார்.

ஒரு கை பார்ப்பாரா...?

ஒரு கை பார்ப்பாரா...?

லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒண்டிக்கு ஒண்டியாக படு வேகமாக செயல்பட்டு வரும் ஜெயலலிதா, தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரு கை பார்ப்பாரா..

பொறுத்திருந்து பார்க்கலாம்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+