விருகம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்.. பதற்றம்
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ரவுடி ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
நெல்லையை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவரை போலீஸார் தேடி வந்தனர்.
மேலும் நெல்லையில் கொல்லப்பட்ட பேராசிரியர் செந்தில்குமார் கொலையில் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜாவும் அவரது கூட்டாளிகளும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

வீடியோ
இதையடுத்து அவரை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் தன்னை என்கவுன்ட்டர் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக ராக்கெட் ராஜா ஒரு வீடியோவை வெளியிட்டார்.

பதற்றம்
இதை கருத்தில் கொண்டு சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

பதற்றம்
ராக்கெட் ராஜாவை தங்களிடம் காட்டுமாறு அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ராக்கெட் ராஜா கைதானதால் தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. நாடார் சமூகத்து மக்களுக்கு ஆதரவாக இருந்ததால் ராஜாவை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

சென்னையில் பதுங்கல்
இந்நிலையில் அவரது நடமாட்டத்தை உளவுத்துறை மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் சென்னையில் பதுங்கியிருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடன் நெல்லை வடக்கு பால பாக்கியம் நகரை சேர்ந்த சுந்தர், பிரகாஷ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி திருநகரை சேர்ந்த ராஜ்சுந்தர், தூத்துக்குடி நடுபட்டு வடக்கு தெருவைச் சேர்ந்த நந்தகோபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications