எடுத்த பட்டுச் சேலையை தவறான இடத்தில் கொடுத்த புரொபஷனல் கூரியர்... ரூ. 16,000 அபராதம்!
நாமக்கல்: நாமக்கல்லில் பட்டுச் சேலையை வேறொரு முகவரியில் ஒப்படைத்த கூரியர் நிறுவனத்துக்கு ரூபாய் 16,040 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை அடுத்துள்ள கொண்டிச்செட்டிப்பட்டியை சேர்ந்த லோகச்சந்தர் என்பவர், கடந்த, 2013 ஆம் ஆண்டு, ஒரு கிலோ எடையுள்ள பட்டுச்சேலையின் ஓரங்களில் எம்ராய்டிங் செய்வதற்காக ஈரோட்டில் உள்ள நிறுவனத்திற்கு நாமக்கல்லில் இருக்கும் "புரொபஷனல் கூரியர்" நிறுவனம் மூலமாக பார்சல் அனுப்பியுள்ளார்.

ஆனால், லேகச்சந்தர் அனுப்பிய சேலை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு முறையாக போய்ச்சேரவில்லை. அதேநேரம், அந்த சேலை வேறொரு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அந்த நிறுவனத்திடம் சென்று தனது சேலையை திரும்ப பெறுவதற்கு லோகச்சந்தர் முயற்சி செய்தபோது, "புரொபஷனல் கூரியர்" நிறுவனம் அதற்கான ஒப்புதல் சான்றும் கொடுக்கவில்லை.
இதனால், வெறுப்படைந்த லோகச்சந்தர், 8,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரே அபகரித்து விட்டதாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்திடம் முறையிட்டார்.
அதன், தலைவர் சுப்பராயன் மன உளைச்சலுக்கு ஆளான லோகசந்தர் சார்பில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், "புரொபஷனல் கூரியர்" நிறுவனத்திடம் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த குறைதீர் மன்ற தலைவர் கிருஷ்ணராஜ், உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், மலர்கொடி ஆகியோர், "புரொபஷனல் கூரியர்" நிறுவனத்தில் சேவை குறைபாடு உள்ளது என்பதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி, சேலை மதிப்பாக, 8,000 ரூபாய், லோகச்சந்தருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, 3,000 ரூபாய், கூரியர் செலவாக 40 ரூபாய், குறைதீர் மன்ற வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாய் என மொத்தம் 16 ஆயிரத்து 40 ரூபாய் செலுத்தவேண்டும் என இருக்கும் "புரொபஷனல் கூரியர்" நிறுவனத்துக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
Professional courier firm fined rupees 16,040 for delivered a silk saree in a wrong address and not adore the mistake.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications