தொடர் மழை: கொத்தவால்சாவடி அருகே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
ராயபுரம்: தொடர் மழையின் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி அருகே கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொத்தவால்சாவடி அருகே உள்ள ஏழுகிணறு நாட்டு பிள்ளையார்கோவில் தெருவில் ஹேமந்த்குமார் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஒரு இரும்பு கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கடை பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டதால் அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து கட்டிடம் இடிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications