குடியரசுத் தலைவர் பிரணாப் மனைவி மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்
சென்னை : குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசையா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் ரோசையா எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியுள்ளதாவது...

உங்கள் அன்பு மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து, துயருற்றேன். உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தனது இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று பிரணாப்புக்கு முதல்வர் ஜெயலலிதாவும் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது...
உங்கள் அன்பு மனைவி சுவ்ரா முகர்ஜி மரணம் அடைந்த செய்தி அறிந்து துயருற்றேன். இது போன்ற துயரமான சூழ்நிலையில் எந்த ஆறுதல் வார்த்தைகளும் போதுமானதாக இருக்காது என்றாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இந்த துயரில் பங்கு கொள்கிறேன்.
உங்களுக்கு நேரிட்ட இந்த துயரத்தை தாங்கும் வகையில் இறைவன் உங்களுக்கு போதிய வலிமையையும், மனோபாவமும் அளிக்க பிரார்த்திக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.. இவ்வாறு தனது இரங்கல் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியார் சுவ்ரா முகர்ஜி மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்மையார் அதிலிருந்து விடுபடாமலே மறைந்துவிட்டார்.
துணைவியாரை இழந்துவாடும் குடியரசு தலைவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications