மாதம் ரூ80,000 டெலிபோன் பில்-ரூ1,00,000 கரண்ட் பில்;470 முறை விமான பயணம்... ரோசய்யாவின் செலவு இது!
சென்னை: தமிழக ஆளுநராக ரோசய்யா பதவி வகித்த 4 ஆண்டுகாலத்தில் ஒரு மாதத்துக்கு ரூ80,000 அளவுக்கு டெலிபோன் பில்லும் 20,000 யூனிட் மின்சாரமும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரோசய்யா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த போது பல மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்ட போதும் ரோசய்யா மாற்றப்படவில்லை. கடந்த மாதம் 31-ந் தேதியுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு அவரை விடுவித்து பொறுப்பு ஆளுநராக மகாரஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவை நியமித்துள்ளது.

சீரமைப்புக்கு ரூ1.27 கோடி
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளில் ரோசய்யா எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் தகவல்களைப் பெற்றிருந்தார். அவர் பெற்றிருந்த விவரங்கள்:
ராஜ்பவனில்தான் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகளைப் பராமரிக்கவும் சீரமைக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2011 ஆகஸ்ட் முதல் 2015 மே வரை மின்கட்டணமாக ரூ.36.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ரூ1லட்சம் மின் கட்டணம்
மாதம் ஒன்றுக்கு சுமார் 20,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக மாதம் ரூ1,00,000 ரூபாயை மின்கட்டணமாகச் செலுத்தி உள்ளனர்.

ரூ1 கோடிக்கு வாகனங்கள்
மெர்சடைஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ1 கோடி.

மாதம் ரூ80,000 டெலிபோன் பில்
4 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிக் கட்டணம் சுமார் ரூ36,00,000. மாதம்தோறும் ரூ80,000 அளவுக்குப் பேசப்பட்டுள்ளது.

470 முறை விமான பயணம்
ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது. இதில் உள்நாட்டுப் பயணச் செலவு ரூ.1.20 கோடி. 470 முறை விமானங்களில் பறந்திருக்கிறார் ரோசய்யா.

85% தனியார் விழாக்கள்
1,400-க்கும் மேற்பட்ட விழாக்களில் பங்கேற்றுள்ளார். இதில் அரசு விழாக்கள் 15% மட்டுமே. 85% அளவுக்குத் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ரோசய்யா.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications