ஆர்கே நகர் இ(எ)டை தேர்தல் - திரிசங்கு வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அணி சேராத நிலையில் உள்ள திரிசங்கு நிலையில் உள்ள வாக்காளர்கள் வாக்கு யாருக்கு என்பதில் திரில் ஏற்பட்டுள்ளது.
தாம்தான் உண்மையான அதிமுக. மக்கள் செல்வாக்கு எங்கள் பக்கம்தான் இருக்கிறது என்று ஓபிஎஸ் மார் தட்டலாம்.
இதுவரை தன் தலைமையில் சந்தித்த தேர்தல் அத்தனையிலும் தோல்விதான் என்பதை மாற்றி, தான் செயல் தலைவர் ஆன முதல் தேர்தலிலேயே வெற்றி என்ற பெயரை ஸ்டாலின் வாங்கலாம்.

எடைக்கு எடை
வென்றால் மட்டுமே ஆட்சியில் நீடிக்கலாம். கட்சியிலும் நீடிக்கலாம் என்ற இக்கட்டான சூழ்நிலை தினகரனுக்கு. இப்படி முக்கிய கட்சி தலைவர்களின் எதிர்காலத்தை எடை போடும் தேர்தலாக மாறிவிட்டது ஆர்கே நகர் இடைதேர்தல்.

தொகுதி வலம்
மக்கள் மனசு பகுதிக்காக தொகுதியை வலம் வந்தோம்... எல்லா தேர்தல்களிலுமே முடிவுகளை நிர்ணியிப்பது இந்தக் கட்சிதான் என்று முன்கூட்டியே தீர்மானிக்காமல் தேர்தல் சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கும் நடுநிலை மக்களின் வாக்கு. இவர்கள் தேர்தல் நெருங்கும்வரை குழப்பத்தில் தான் இருப்பார்கள். அப்படி ஒரு நிலைமை இப்போது அதிமுக தொண்டனுக்கே ஏற்பட்டிருக்கிறது

குழப்பம்
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கிய பிறகும் கூட கணிசமான மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இன்னும் முடிவு பண்ணலை. குழப்பமா இருக்கு என்று சொல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும்
இருக்கும் ஒரே ஒற்றுமை சசிகலாவிற்கு மட்டும் ஓட்டு போட மாட்டேன் என்பது தான்.

சசிகலாவுக்கு கிடையாது
பணம் வாங்கிவிட்டு அதற்கேற்றாற்போல் போடுவீர்களா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். ஆனாலும் கூட இவர்கள் எண்ணிக்கை தெளிவான முடிவெடுத்தவர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என்பது தெரிகிறது.

ஓபிஎஸ்சா.. திமுகவா என்பதுதான் போட்டியே!
ஓபிஎஸ்சா திமுகவா என்பதில் வேண்டுமானால் இவர்கள் முடிவு பயன்படும். மற்றபடி பெரிய தாக்கத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications