சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.34 கோடி புதிய 2000 நோட்டுக்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுக்களை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை கண்ணில் பார்க்க சாமான்ய மக்கள் மணிக்கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால் ஊழல்வாதிகளும், அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், பழைய ரூபாய் நோட்டுக்களையும், கறுப்பு பணத்தையும் கோடிக்கணக்கில் மாற்றி வெள்ளையாக்கி வருகின்றனர். கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியவர்களை வருமான வரித்துறையினர் பொறி வைத்து பிடித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கட்டுக் கட்டாக கொண்டுவரப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருபாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதனையடுத்து அவற்றை கொண்டு வந்த 5 பேரை பிடித்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு புதிய ரூபாய் தாள்கள் கோடிக்கணக்கில் பிடிபடும் நிலையில், தற்போது விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள பணம் யாருடையது என்று விசாரணை நடந்து வருகிறது. அரசியல் வாதிகளுக்காக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி எடுத்து வரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications