For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தப் பக்கம் கஞ்சா.. அந்தப் பக்கம் தங்கக் கடத்தல்.. பரபரப்பில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்துக்கு கடத்தி வர முயன்ற ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை வந்த துபாய் விமானத்தில் கழிவறையில் 1.50 கிலோ தங்கம் சிக்கியது- வீடியோ

    ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடத்த வர முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தினையும், மண்டபம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல்கள் தொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் படகு ஒன்று தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை விரட்டி பிடித்து சோதனையிட்டனர்.

    Rs.1.50 crore worth of gold seized in sea-3 person caught

    அதில் ஒன்றரை ரூபாய் மதிப்புள்ள 2.60 கிலோ தங்கம் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அவற்றினை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் கடத்திவந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல, மண்டபம் பகுதியை அடுத்துள்ள வேதாளை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 கார்களில் 136 கிலோ கஞ்சா பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறிந்தனர்.

    அதாவது இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார், அதுதொடர்பாக 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இலங்கை-இந்தியா இடையே தங்கம், கஞ்சா கடத்துவது தொடர்கதையாகிவிட்டது. எவ்வளவுதான் இருதரப்பு கடற்படையினர் விழிப்பாக இருந்தாலும் பலத்த கட்டுப்பாடு, கண்காணிப்பையும் மீறி கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஒன்றரை கோடி தங்கமும், 2 கோடி கஞ்சாவும் பிடிபட்டுள்ளதால், இவை இரண்டிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    English summary
    The police seized gold worth Rs 1.5 crore worth of gold from Sri Lanka to Rameshwaram and arrested three persons in connection with the incident. Police detained and seized 136 kanja parcels in the 3 cars while the police were involved in the vehicle. Four arrested in connection with the incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X