கனிம மணல் மூலம் ரூ.10லட்சம் கோடி கொள்ளை: தூத்துக்குடியில் விஜயகாந்த் குற்றச்சாட்டு
தூத்துக்குடி: கனிமவளக் கொள்ளையில் தனி நபர் ஒருவர் 10 லட்சம் கோடி முறைகேடு செய்துள்ளார். இந்த தொகையில் தமிழகத்தின் ஒரு ஆண்டு பட்ஜெட் போட்டு விடலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 9வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:
இங்கு திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது எனக்கு ஆனந்தமாகவும்,என்தொண்டர்களைப் பார்க்கும் போது ஆணவமும் எனக்குள்ளது.

ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் ஆனா அதற்க்கு மாறாக மக்களை அழிக்கும் முயற்சியில் தான் அவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். நெல்லை ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையில் தனி நபர் ஒருவர் 10 லட்சம் கோடி முறைகேடு செய்துள்ளார். இந்த தொகையில் தமிழகத்தின் ஒரு ஆண்டு பட்ஜெட் போட்டு விடலாம்.
2007 ல் சட்டசபையில் கலைஞர் கனிம வளக்கொள்ளை பற்றி பேசியபோது அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். ஒரு ஏக்கர் 18 ரூபாய்க்கு, 20 ஆண்டுகளுக்கு அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.400 ஏக்கர் குத்தகையில் 98 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது என்கின்றனர். வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தந்த அறிக்கையில் 438 கோடி ரூபாய் கிடைக்கும் என்கின்றனர்.
தமிழக முதல்வர் பிரதமர் கனவில் இருக்கிறார். தாது மணல் கொள்ளையில் 10இலட்சம் கோடி வரை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.மணல் கொள்ளை தலைவன் வசிக்கும் இடத்தில் இருந்து நான் சொல்லுகிறேன்.தாதுமணல் கொள்ளை குறித்து கடந்த ஆண்டே பேசியவன் நான்.இது தடுக்கப்பட வேண்டும்.
இந்த இனிய நாளில் இலங்கையில் தமிழர் ஆட்சி மலர்ந்துள்ளது.என்ற செய்தி எனக்கு மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தொண்டர்களே இன்னும் நிறைய களப்பணி ஆற்ற வேண்டியதுள்ளது.தாயாராக இருங்கள்.லோக்சபா தேர்தல்,சட்டமன்ற தேர்தல் என எராளமான பணிகள் இருக்கிறது. இங்கு தரண்டு நிற்கும் எத்துனை பேர் எம்.பிக்கள்,எம்.எல்.ஏ.க்கள்.மந்திரிகள்,மேயர்கள்.நமக்கான காலம் காத்திருக்கிறது.விரைவில் பெரிய மாநாடு போடப்படுகிறது.அதற்கான இடம் 100ஏக்கர் பரப்பளவில் பார்க்கப் பட்டு வருகிறது.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை செயற்குழு எனக்கு வழங்கியுள்ளது.நான் தொண்டர்களை கேட்டு தான் முடிவு செய்வேன். 100 ஏக்கரில் தே.மு.தி.க.,கட்சி மாநாடு நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளும் தொண்டர்களை கேட்டு முடிவு செய்வேன்.
லோக்சபா தேர்தலில் இளைஞர் நலன் காப்பவராக இருக்க வேண்டும். தூய்மையானவராகவும், ஊழலற்ற ஆட்சி வழங்குபவராகவும், புதியவராகவும் இருக்க வேண்டும், நிச்சயமாக அதிமுக வோடு.கடுமையான போட்டி நமக்குண்டு,தொண்டர்களே தயாராக இருங்கள் இன்னும் நிறைய பணிகள் நமக்கு உள்ளது.என்றார்.
இந்த கூட்டத்தில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,பிரேமலதா விஜயகாந்த், கழக பொருளார் ஏ.ஆர். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ.துணை செயலாளர்கள் பி. முருகேசன், ஆர். உமாநாத், என். ஜாகீர் உசேன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் என். சண்முகராஜா தலைமை உரையாற்ற. தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பெ. பொன்ராஜ் வரவேற்பு உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications