100,50 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு
சென்னை : 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய் நோட்டுக்களுக்கு தேவை அதிகரித்து பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரூ.100 நோட்டாக எடுக்க ஏ.டி.எம்.களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்து வருகின்றனர். கையில் இருக்கும் 500,1000 ரூபாய் நோட்டுக்களை ஏராளமானோர் டெபாசிட் செய்து வருகின்றனர்.

நாளை முதல் இரு தினங்களுக்கு ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் வங்கி நாளை ஒருநாள் விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியானதால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே கையிருப்பில் உள்ள 500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற படாத பாடு பட்டு வருகின்றனர்.
பெட்ரோல் பங்குகளில் 500, 1000 ரூபாய்களுக்கு மட்டுமே பெட்ரோல் போடப்படுகின்றன. உணவகங்களில் சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பவர்களிடம் வாங்க மறுப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் தீர்ந்து விட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் பங்க்குகளில் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று அறிவித்தும் பல இடங்களில் வாங்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிலரோ தங்களின் கைகளில் இருக்கு சில 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை அவசர தேவைக்காக பெட்ரோல் பங்குகளில் கொடுத்து மாற்றிச் சென்றனர். அதிலும் சிலர் கமிஷன் எடுத்துக்கொண்ட பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வரை 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பர்ஸ்களில் வைத்துக்கொண்டு கெத்து காட்டியவர்கள் எல்லாம் இப்போது 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள் சில்லறை கேட்டுக்கொண்டு மணிக்கணக்கில் அலைந்து கொண்டிருந்தனர். ஒரே அறிவிப்பில் மோடி பலரின் தூக்கத்தைக் கெடுத்து விட்டார் என்றே பேசிக்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications