நீங்க 2000 ரூபாயை.. வங்கிகளுக்கு சென்று மாற்ற போறீங்களா மக்களே.. இதை படிச்சிட்டு போங்க.. முக்கியம்
சென்னை: 2000 ரூபாய் வங்கிகளுக்கு சென்று மாற்ற போறீங்களா.. அப்படியானால், வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றபடி ப்ளான் செய்யலாமே?
புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.. இதைத்தவிர, நாடு முழுவதும் ரூ,2,000 நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவிட்டுள்ளது.
புது அறிவிப்பு:
2000 ரூபாய் நோட்டை வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் கலக்கமடைந்தனர்.. ஆனால் 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்ததை போல் இப்போது அதிரடியாக அறிவிக்கவில்லை...

அதற்கு பதிலாக, மக்கள் தங்கள் வசம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கி இருக்கிறது.
க்ளீன் நோட் பாலிசி:
இது தவிர, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மக்கள் தங்களது வழக்கமான பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.. க்ளீன் நோட் பாலிசியின் படி ரூ.2000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி உள்ளது.. அந்தவகையில், பொதுமக்களும் பணத்தை மாற்றி வருகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், இனிவரும் மாதங்களில், வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்பதை தெரிந்துகொண்டால், அதற்கேற்றவாறு வங்கிக்கு பொதுமக்கள் செல்ல உதவியாக இருக்கும்..
விடுமுறை:
வரப்போகும் ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதே போல் ஜூலை மாதம் 15 நாட்களும், ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 4 - வது சனி உட்பட ஞாயிற்று கிழமைகளை சேர்த்து 14 நாட்களும், செப்டம்பர் மாதம் 17 நாட்கள் என மாதம் 58 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் விடுமுறை நாட்களை அறிந்து விரைவாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications