நெல்லை மேயர் புவனேஸ்வரி மீது பண மோசடி வழக்கு: விசாரணையை தள்ளி வைத்தது மதுரை கோர்ட்
மதுரை: மோசடி புகாரில் நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை. வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துக்கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''எனது நிறுவனத்தின் கிளையை நெல்லையில் அமைப்பதற்காக அலுவலகத்திற்கு இடம் பார்த்தேன். பாளையங்கோட்டையிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை காலியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

கடைக்கான ஒப்பந்தம் மற்றும் சாவியை பெற நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறினர். இந்த பணத்தை மேயரின் உதவியாளரிடம் கொடுத்தேன். அதன் பிறகு கடை சாவியை கொடுத்தனர். ஆனால் வாடகை ஒப்பந்தத்தை தரவில்லை. இதனிடையே, ஆக.2ல் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications