திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணும் பணி நிறைவு
கோவை: திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணும் பணி நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி திருப்பூர் செங்கப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 3 கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு கண்டெய்னர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பணம் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அளிக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கோவை பாரத ஸ்டேட் வங்கி காப்பகத்திலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது.
இருப்பினும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பணம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. பின்னர் இந்த பணத்தை எண்ணி சரி பார்க்க வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.
இதனையடுத்து, இன்று அதிகாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கண்டெய்னர் லாரிகளும் பலத்த பாதுகாப்புடன் கோவை ஸ்டேட் வங்கி நிறுவன காப்பக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணப் பெட்டிகள் இறக்கப்பட்டு வங்கியின் பணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது.
பணத்தை எண்ணும் பணி முற்பகல் 11 மணிக்கு தொடங்கி மாலை வரை நீடித்தது. சுமார் ஆறரை மணி நேரம் நடந்த இந்த பணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அளித்தபிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications