அரசு கருவூலத்திற்குச் சென்றது தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ 76.89 கோடி
சென்னை: லோக்சபா தேர்தல் கெடுபிடிகளின் போது தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.76.89 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டத் தேர்தல் கடந்த 24ம் தேதியன்று ஒரே கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்டது. அத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, தீவிர வாகனச் சோதனை மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் தரப்படுவதை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். அதன்படி, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களை அரசு கருவூலத்திற்கு அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையை தடுப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது.
தீவிர சோதனை...
இதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரொக்கமாகவும், பரிசுப் பொருட்களாகவும்...
இந்த சோதனையில் 25 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரத்து 211 ரூபாய் ரொக்கமாக பிடிபட்டது. அதோடு, 51 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரத்து 626 ரூபாய் மதிப்புள்ள சேலைகள், நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்த மதிப்பு...
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு, 76 கோடியே 89 லட்சத்து 43 ஆயிரத்து 837 ரூபாயாகும்.
வீடியோ பதிவு...
சோதனை மற்றும் கைப்பற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு கருவூலம்...
பிடிபட்ட பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் அரசு கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications