ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு: 6 பேரும் போட்டியின்றி தேர்வு?
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதகிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜூன் 11ம் தேதி அந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து மாநிலங்களை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், வைத்திலிங்கம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 24ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்த 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து அண்மையில் அதிமுகவுக்கு வந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications