ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 5 ஆயிரமாம் – குற்றம் சாட்டும் இந்திய கம்யூனிஸ்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடைபெறுவதாக குற்றம் சுமத்தினார்.

தேர்தல் விதிமுறைகளை அதிமுக அப்பட்டமாக மீறி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், ‘'விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது. விதிமீறல்களை எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளேன்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications