ஷாக்கிங்..திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் சுற்றுலா பயணி பலாத்காரம்! காட்டேஜ் உரிமையாளர் உட்பட மூவர் கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் பயணி பலாத்காரம்- வீடியோ

    திருவண்ணமலை: திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலையின், கிரிவலப்பாதையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்யாவை சேர்ந்த 21 வயது பெண்ணின் அறை கதவு, நேற்று பிற்பகல் வரை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    Russian woman tourist raped in Tiruvannamalai, 3 detained

    காவல்துறையினர் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில், நகக்கீறல் காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்டு அரசு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விசாரணையில் ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக காட்டேஜ் மேலாளர் பாரதி, அவரது சகோதரர் நீலகண்டன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

    ரஷ்ய பெண் கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை வந்திருந்து காட்டேஜில் தங்கியிருந்து, சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் அறை வாடகை ரூ.200 ஆகும். டூவீலர் ஒன்றையும் அவர் வாடகைக்கு எடுத்திருந்தார்.

    Russian woman tourist raped in Tiruvannamalai, 3 detained

    இதனிடையே, திருவண்ணாமலையின் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமி 17 பேரால் 7 மாதங்களாக சென்னையில் பலாத்காரம் செய்த சம்பவம் தேசிய அளவில் தலைப்பு செய்திகளாகியுள்ள நிலையில், இப்போது ரஷ்ய பெண் பலாத்காரம் செய்யப்பட்டதும் செய்தியாகி, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+