தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !

Subscribe to Oneindia Tamil

நெல்லை : தமிழக, கேரள எல்லைப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ருத்ராட்ச மரம் உள்ளதால் பக்தர்கள் அதனை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு அருகே உள்ள இடப்பாளையம் கிராமத்தில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பல்வேறு மரங்கள் உள்ள நிலையில், ஒரே ஒரு மரம் மட்டும் புதியதாக இருந்துள்ளது. அது என்ன மரம் என தெரியாமலேயே அவர்களும் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரங்களில் கொத்துக் கொத்தாய் காய்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது.

Ruthratcham tree is now Tamilnadu-Kerala border

பார்ப்பதற்கு புதியதாய் இருக்கிறதே, இது என்ன காய் என தெரியாமல் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பார்த்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் 'இது ருத்ராட்ச மரம், அதிலுள்ள காய் ருத்ராட்சம் என்றும், நேபாள நாட்டில் தான் இந்த மரம் அதிகளவில் உள்ளது, கேரளாவில் எப்படி வளர்ந்து என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் ஊரில் பரவியதால் ஏராளமான மக்கள் வந்து மரத்தை வணங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.பலர் ருத்ராட்ச காய்களை பறித்து சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது மரத்தில் ஏராளமான ருத்ராட்ச காய்கள் உள்ளது. கேரள பகுதியில் மரம் உள்ளதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆலயத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தெய்வங்களின் சிலைகள் இருந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கல்லடா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் எல்லா சிலைகளும் அடித்து சென்று விட்ட நிலையில், இந்த முருகன் சிலைமட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+