தமிழகத்தில் புதிதாக தேர்தல் ஐ.ஜி: எஸ்.என். சேஷாயி நியமனம்- 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழக அரசு ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இதில் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எஸ்.என்.சேஷாயி, சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எஸ்.என்.சேஷாயி, சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த டி.ஐ.ஜி, என்.கே.செந்தாமரைக்கண்ணன், சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேர்தல் டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஜேயேந்திர எஸ்.பிதாரி, மதுரை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன், மைலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மைலாப்பூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்க உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எஸ்.ஆர்.செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. யாக மாற்றப்பட்டு உள்ளார்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பி.கண்ணம்மாள், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு ஏற்று உள்ளார். ஆக மொத்தம் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications