7 பேர் விடுதலை: கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறு; தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு-'கூடங்குளம்' உதயகுமார்
இடிந்தகரை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையை அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறானது என்றும் தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாலர் சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுவிக்க முயற்சிப்பது தவறு என்கிற ரீதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இரத்தினச் சுருக்கமாக அவர் பேசியிருப்பதிலிருந்தே பிரச்சினையின் ஆழ அகலங்கள் தெரியாமல், முழு புரிதல் இல்லாமல் சொல்லப்பட்டக் கருத்து அது என்பது தெளிவாகிறது. ஈழப் பிரச்சினை பற்றி பிரசாந்த் பூஷனோடு ஒரு முறை இடிந்தகரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அது பற்றி தனக்குப் பெரிதாக தெரியாது என்று உண்மையைச் சொல்லி அதிகம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதே பக்குவமும் முதிர்ச்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், யோகேந்திர யாதவுக்கும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
இந்தியாவின் அடுத்தத் தலைமுறை தலைவர்களான இவர்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைப்பது ஒரு மிக முக்கியமானக் கடமையாக இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதனைத் திறம்பட செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அபாண்டமாகக் குற்றஞ்சாட்டப்பட்டத் தோழர்களை விடுவிக்க முன்வரும் தமிழக அரசைப் பாராட்டுவோம்.
இவ்வாறு சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
People's Movement Against Nuclear Energy convener S.P. Udayakumar has criticised former Delhi Chief Minister Arvind Kejriwal's statement against Tamil Nadu government's decision to release all seven convicts in Rajiv Gandhi assassination case.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications