ராமரை அவமதிப்பதா? இயக்குநர் சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் புகார்
சென்னை: ராமாயண இதிகாச நாயனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக நடிகரும்,நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர்.முதல்வருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதம் வருமாறு:
சமீப காலமாக "நாம் தமிழர்" என்கின்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் சைமன் என்கின்ற சீமான் என்பவர், இந்த நாட்டின் இதிகாச புருஷன், சக்கரவர்த்தி திருமகன் உலகில் உள்ள ஹிந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீ. ராமபிரானை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார். இந்த வீடியோ யுடுயூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து நானும் என் வீட்டில் உள்ள அனைவரும் மட்டுமன்றி என் நண்பர்களும் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளானோம்.
இவர் சிவலிங்கத்தையும் இதைப்போலவே கேவலமாக பேசியுள்ளார்.
நம் பாரதத்தின் பெரும்பான்மையான சமுதாயமான இந்துக்களை மிகவும் புண்படுத்தி பேசியுள்ளார்.
தமிழ் நாடு போன்ற அமைதிப் பூங்காவில் இப்படி ஒருவர் ஒரு மதத்திற்கு எதிராக பேசி, கடவுள்களை அசிங்கமாக பேசுவது நாட்டின் ஜன நாயகத்திற்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கிறது.
மேலும் , அனைத்து சமுதாயத்தையும் சமமாக பாவிக்கும் நீங்கள், சைமன் என்கிற சீமான் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications