எஸ்.வி.சேகர் அளித்த ‘சுக பிரம்ம மகரிஷி’யை ரசித்த கருணாநிதி...

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த திங்களன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர், சுக பிரம்ம மகரிஷி புகைப்படம் ஒன்றையும் அவரிடம் அளித்தார்.

அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற எஸ்.வி.சேகர், கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி மற்று மு.க. அழகிரியிடம் நெருக்கம் காட்டினார். இந்நிலையில் அவர் திமுகவில் சேரலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் அதிமுகவில் இருந்து விலகியும் அவர் அவ்வாறு சேரவில்லை. இருப்பினும் கருணாநிதியுடனான நட்புணர்வை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடிய திமுக தலைவர் கருணாநிதியை கடந்த திங்களன்று நேரில் சந்தித்த எஸ்.வி.சேகர் வாழ்த்து ஓவியம் ஒன்றை பரிசளித்தார்.

இதுபோன்ற விஷயங்களில்தான் கருணாநிதிக்கு நம்பிக்கை கிடையாதே. எப்படி கொடுத்தீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு எஸ்.வி.சேகர் கூறியதாவது :-

யார் இது..?

யார் இது..?

முதன்முதலாக 1992-ல் கருணாநிதியிடம் சுக பிரம்ம மகரிஷியின் இந்த படத்தை அளித்தேன். இது யார் என்றார்.

சுக பிரம்ம மகரிஷி...

சுக பிரம்ம மகரிஷி...

‘‘ஐயா, இவர் குபேரனுக்கே வெங்கடாஜலபதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்த சுக பிரம்ம மகரிஷி. அவர் மார்க்கண்டேயருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சி இது'' என்றேன்.

கிளி மூக்கு பெண்...

கிளி மூக்கு பெண்...

அதற்கு அவர், ‘‘இப்படி கிளிமூக்கு போல பெண் கிடைத்தால் என்ன செய்வாய்?'' என்றார். ‘‘இதைவிட பெரிய மூக்குள்ள பெண்ணைப் பார்த்துவிட்டேன் என்று நகைச்சுவையாகக் கூறவும், சிரித்துவிட்டார்.

மறுக்க மாட்டார்...

மறுக்க மாட்டார்...

அவரை சந்திக்கும்போதெல்லாம் இந்த படத்தைக் கொடுப்பேன். அவரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்.

புண்படுத்த மாட்டார்...

புண்படுத்த மாட்டார்...

அவர் பகுத்தறிவுவாதியாக, மதநம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தமாட்டார்' என இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+