ரஜினிக்கு எதிராக பேச அழைத்த தொலைக்காட்சி... மறுத்த எஸ்வி சேகர்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது விளம்பரத்துக்காகத்தான் என்று பேசுமாறு கூறிய தொலைக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர்.
லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முதல்வராகி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலளித்த ரஜினி, சூழ்நிலை அப்படி அமைந்தால் நான் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்று பதிலளித்தார்.

இது தமிழக அரசியல் மற்றும் மீடியா வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த மூன்று தினங்களாக இதுதான் பேசுபொருள் என்றாகிவிட்டது.
தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
ஒரு தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கூறியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் விவாதம். இதில் பேச வருமாறு நடிகர் எஸ்வி சேகரை அழைத்துள்ளனர்.
அவரும் சம்மதம் சொல்ல நினைத்த கணத்தில், அடுத்து ஒரு கண்டிஷன் போட்டார்களாம் தொலைக்காட்சிக்காரர்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பது வெறும் விளம்பரத்துக்காகத்தான் என்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்றார்களாம். உடனே மறுப்பு தெரிவித்த சேகர், அதுக்கு வேற ஆளைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து எஸ்வி சேகர் கூறியுள்ளதாவது:
ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பேசியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தார்கள். உடனடியாக
விளம்பரத்துக்காகத்தான் என்றே பேச வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுக்கு உங்ககிட்ட சம்பளம் வாங்கற ANCHOR ஐ பேசச் சொல்லுங்க. நான் என் கருத்தைத் தான் சொல்லமுடியும். அதனால் வரமுடியாது என சொல்லி விட்டேன்."
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications