நடிகர் சங்க கட்டடத்தை குத்தகைக்கு விட்டதில் ரூ 60 கோடி முறைகேடு! - எஸ்வி சேகர்

Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கக் கட்டடத்தை குத்தகைக்கு விட்டதில் ரூ 60 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. ஏராளமான போலி உறுப்பினர்களை வைத்து நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ளனர் என்று நடிகர் எஸ்வி சேகர் குற்றம்சாட்டினார்.

மன்னார்குடியில் உள்ள இயல் இசை நாடக மன்றத்துக்கு வந்த எஸ்வி சேகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர் சங்கக் கட்டடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது.

S Ve Shekar levelled Rs 60 cr corruption charges on Nadigar Sangam

போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரை முறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர்.

இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர். அதற்கு இந்த போலி உறுப்பினர்கள் உதவுவார்கள்.

இதற்காகத்தான் வாக்காளர்களின் விநவரங்களைக் கூட தர மறுக்கிறார்கள்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+