நல்ல நேரம் பார்த்து பாஜகவில் சேர்ந்த எஸ்.வீ சேகர்!
சென்னை: நல்ல நேரம் பார்த்து பாஜகவில் இன்று சேர்ந்தார் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்வீ சேகர்.
அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்வி சேகர். பின்னர் காங்கிரஸில் இணைந்து விலகினார்.

இடையில் சில காலம் திமுக அனுதாபியாகவும் இருந்தார்.
சில மாதங்கள் எந்தக் கட்சியையும் சாராமலும் இயங்கி வந்த எஸ்வி சேகர், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் இன்று பிற்பகல் 12.15க்கு பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார்.
4.30 மணிக்கு...
தான் பாஜகவில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 4.30 மணியளவில் பாஜக தலைமைக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்தார் எஸ்.வி. சேகர்.

அப்போது, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து எஸ்வீ சேகர் நம்மிடம் பேசுகையில், "நரேந்திர மோடியின் ஆசியுடன்தான் பாஜகவில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் எனக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார்.
எனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. இருக்கும் இடத்துக்கு என்னால் என்றுமே நன்மைதான் உண்டாகுமே தவிர கெட்ட பெயரை உண்டாக்கமாட்டேன். இதுவரை நான் இருந்த கட்சிகளில் எனக்கு யார் மீதும் வருத்தமில்லை. என் மீதும் யாருக்கும் வருத்தமிருக்காது.

நரேந்திர மோடியின் தலைமைதான் இன்று நாட்டுக்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த நாடும் இப்போது உணர்ந்து வருகிறது," என்றார்.
-
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications