இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சா? - எஸ்.வி.சேகர்
அதிமுவுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்று எம்.பி.மைத்ரேயன் பேட்டியை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு பாஜகவின் வாக்கு வங்கி தேவையில்லை என்று மைத்ரேயன் எம்.பி. கூறியதை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், இணையாத மனங்கள் இருக்கும் போதே பேச்சு அதிகம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மதுசூதனனின் தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு மைத்ரேயன் எம்.பி. சென்றார்.

அப்போது மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக வெற்றி பெற எங்கள் வாக்கு வங்கியே போதுமானது. பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தித்தாளில் வந்த செய்தியை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆன்னா ஊன்னா டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே 👎👎😭 pic.twitter.com/DamldqgslB
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 3, 2017
எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறுகையில், ஆன்னா ஊன்னா டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே இந்த ஆட்சி கவிழ்ந்திடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பதிவில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் கடந்த பின்னரும் மனங்கள் இணையவில்லை என்று கூறியிருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications