பேரனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.வி.சேகர்.. சென்னையில் பத்திரிக்கை கொடுக்க பயணம்!
பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
Recommended Video

சென்னை: பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. இந்த பிரச்சனையில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.

ஜாமீன் நிராகரிப்பு
ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை.அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.

பிறந்த நாள் விழா
இந்த நிலையில் சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.வி. சேகர் நேற்றில் இருந்தே வீட்டில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரை அந்த பகுதியில் பார்த்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கை கொடுக்க
இதற்காக முக்கியமான நபர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார். சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். நாளை நிகழ்வில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இப்போது எங்கே
இவர் நேற்றில் இருந்தே இதற்காக, சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். இதற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்ட போதுதான், அந்த புகைப்படம் வெளியானது. அவர் போலீஸ் பாதுகாப்புடன்தான் பத்திரிக்கை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications