3 வாரமாக ஓட்டம்.. விடாமல் துரத்தும் சட்டம்.. தப்ப வழியே இல்லை.. சரணடைகிறார் எஸ்.வி.சேகர்?
எஸ்வி சேகர் சரணடைய வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை: உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து வேற வழியே இல்லாமல் பாஜகவின் எஸ்.வி.சேகரை சரணடைய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் பதிவை சமூக வலைதளங்களில் பாஜகவின் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து கைதுக்கு பயந்து கடந்த 3 வாரங்களாக எஸ்.வி. சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், கடும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தார்.
இதனால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் அரசு தரப்பு ஆலோசனை நடத்தியிருக்கிறது.
இதில், நீதிமன்றத்தின் கெடுபிடி அதிகமாகிவிட்டது. இதனால் அரசுக்கு நெருக்கடி உருவாகிறது. எஸ்.வி.சேகர் உடனே சரணடைவதுதான் சரியாக இருக்கும் என கிரிஜா வைத்தியநாதனிடன் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ, எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார்? என தமக்கு தெரியாது என நழுவியிருக்கிறார்.
தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையெனில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் சிக்கல் ஏற்படலாம். ஆகையால் வேறுவழியே இல்லாமல் எஸ்.வி.சேகர் சரணடைய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications