தலைவர்னா அவ்வளவு ஈஸியா? எஸ்.வி சேகர் நாடகத்தில் பேசுவதை போல பேசுகிறார்.. தமிழிசை கிண்டல்
எஸ்.வி சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசுகிறார் என்று கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரை கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: எஸ்.வி சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசுகிறார் என்று கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவரை கிண்டல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதமாக தமிழக பாஜகவிற்கு போதாத காலம் என்றுதான் கூறவேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா பிரச்சனையில் சிக்கி தமிழிசை பிரச்சனைக்கு உள்ளானார். அதன்பின் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தவறாக பேசி பிரச்சனைக்கு உள்ளானார்.
இந்த நிலையில் தற்போது எஸ்.வி சேகர் பேச்சு காரணமாக பாஜக கட்சிக்கு உள்ளேயே குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த எஸ்.வி சேகர் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளார்.

என்ன சொன்னார்
எஸ்.வி சேகர் தனது பேட்டியில், பாஜக தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் என்னை யாராவது பயன்படுத்திக் கொண்டால் நல்லது. அவர்களுக்கு அது நன்மை பயக்கும். இல்லையென்றால் அவர்களுக்குத்தான் அது பிரச்சனை ஆகும். எனக்கு அதில் நஷ்டம் இல்லை.

தலைவர் பதவி
தமிழக பாஜக தலைமையை நான் ஏற்க வேண்டுமா என்று பிறகு பேசலாம். முதலில் பாஜக என்னை ஏற்க வேண்டும். ஒருவேளை தலைமையை ஏற்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக பாஜக தலைமையை நான் ஏற்றுக்கொள்வேன். இப்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்குகளை நான் வாங்கி காட்டுவேன். தமிழிசை வீட்டு வாசலில் நின்று தங்கச்சி நான் வந்துட்டேன் என்று சொல்லட்டுமா என்று தெரிவித்தார்

என்ன பதில்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அதில் ''இதுக்கு பதில் சொல்றதை விட சிரிச்சிட்டு விட்டுடலாம்.. பல சிரிப்பு நாடகத்துல நடிச்சு நடிச்சு, நாடகம்னு நினைச்சு பேசிட்டார் போல அவர். பாஜக தலைவர்னா அவ்வளவு இலகுவான விஷயமாக அவர் நினைத்துவிட்டார்'' என்று பதில் அளித்தார்.

குழப்பம்
இதனால் தற்போது பாஜக கட்சிக்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இவ்வளவு நாள் பாஜகவிற்கு வெளியில் இருந்துதான் பிரச்சனை வந்தது. தற்போது உட்கட்சிக்கு உள்ளேயே பிரச்சனை உருவாகி உள்ளது. இதை தமிழிசை எப்படி சமாளிப்பார், அணிகள் உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications