மதுரை திருமங்கலத்தில் கார் பாலத்தில் கவிழ்ந்து விபத்து... தெலுங்கானா எஸ்ஐ உள்பட 4 பேர் பலி
மதுரை அருகே திருமங்கலத்தில் சபரிமலை சென்றுவிட்டு தெலுங்கானா திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் கார் பாலத்தில் மோதி 4 பேர் பலியாகிவிட்டனர்.
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் சபரிமலை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த தெலுங்கானா பக்தர்களின் கார் பாலத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ரகு மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றிருந்தனர். யாத்திரை முடித்துக் கொண்டு மதுரை திருமங்கலம் வழியாக தெலுங்கானாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மறவன்குளம் அருகே வேகமாக வந்த இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி சுரங்கப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உதவி ஆய்வாளர் ரகு உள்பட 4 பேர் பலியாகிவிட்டனர். மேலும் ஒரு படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலியான 4 பேரின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications