ஈபிஎஸ்,ஓபிஎஸ்க்கு மரியாதை தராத சின்னச்சாமி... தூக்கி அடிக்கப்பட்ட பின்னணி

அதிமுக அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரான சின்னச்சாமியை அதிரடியாக நீக்கியிருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும். இதற்கான பின்னணி தகவல் பற்றி பரபரப்பாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஈபிஎஸ்,ஓபிஎஸ்க்கு மரியாதை தராத சின்னச்சாமி... தூக்கி எரியப்பட்ட பின்னணி | Oneindia Tamil

    சென்னை: ஓபிஎஸ் ஈபிஎஸ் பேச்சை கேட்காமல் தினகரன் பக்கம் சின்னச்சாமி சாய்ந்ததே அதிமுக அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது சின்னசாமியின் செயல்பாடு சரியில்லாததே நீக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டாலும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதே இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

    புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை, தொழிற்சங்க பணிகளை மேற்கொள்வதற்காக யு.ஆர் கிருஷ்ணன், தாடி ம.இராசு, சங்கரதாஸ் உள்ளிட்ட மூவர் குழுவை நியமித்துள்ளனர்.

    அண்ணா தொழிற்சங்கம்

    அண்ணா தொழிற்சங்கம்

    ஜெயலலிதாவின் நம்பிக்கைப்பெற்ற சின்னச்சாமியை நீக்கியிருப்பது அதிமுகவில் பெருத்த விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும், அதிமுகவின் 14 துணை அமைப்புகளில் அண்ணா தொழிற்சங்கம் மிக முக்கியமானது என்பதால் அதன் செயலாளர் நீக்கப்பட்டிருப்பதை மிக முக்கியமாக கவனிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

    எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

    இதன் பின்னணி குறித்து, அதிமுகவின் மேலிட தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தபோது," எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடுவது குறித்தும் , எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்தும் கட்சியின் துணை அமைப்புகள் அனைத்தும் தங்களின் பங்களிப்பைக் காட்ட வேண்டும் என எடப்பாடி சமீபத்தில் அனைத்து துணை அமைப்புகளின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

    மதிக்காத சின்னச்சாமி

    மதிக்காத சின்னச்சாமி

    அதன்படி , அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற 13 துணை அமைப்புகளும் தனித்தனியாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி விவாதித்தன. அதில், விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், சின்னச்சாமி இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவில்லை. அதற்கான அக்கறையும் காட்டவில்லை.
    இதுகுறித்து சின்னச்சாமியிடம், ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    தினகரனுக்கு ஆதரவு

    தினகரனுக்கு ஆதரவு

    அதற்கு முறையான பதிலை சொல்லாமல் அலட்சியப்படுத்தியதோடு தினகரனுக்கு ஆதரவாக சில கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இதனை ஓபிஎஸ் ரசிக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் நடத்தியபோது அண்ணா தொழிற்சங்கமும் அதில் பங்கெடுத்தது.

    சீனியர் அமைச்சர்கள் புகார்

    சீனியர் அமைச்சர்கள் புகார்

    அப்போது, அண்ணா தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என சின்னச்சாமியிடம் முதல்வர் எடப்பாடி வலியுறுத்திய போதும் அவரது உத்தரவுக்கு மரியாதை தரவில்லை சின்னச்சாமி. தினகரனின் சொல் கேட்டே சின்னச்சாமி இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என சின்னச்சாமிக்கு எதிராக சீனியர் அமைச்சர்களும் புகார் வாசித்துள்ளனர். இவைகள் தான் சின்னச்சாமியின் பதவிப்பறிப்புக்கு காரணம் என விவரிக்கின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+