மழைக்குப் பின் வீட்டில் நுழைய இதெல்லாம் முக்கியம் - ஒரு பாதுகாப்பு பட்டியல் உங்களுக்காக!
சென்னை: சென்னையில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மழை நின்ற பின்னர் வீடுகளுக்கு திரும்பும் மக்கள் எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டு இல்லங்களுக்கு திரும்புங்கள். முடிந்தவரையில் வீட்டினை நன்கு சுத்தம் செய்துவிட்டே உள் நுழையுங்கள்.

இல்லையெனில் கழிவு நீர் உட்புகுந்ததால் தொற்று நோய் அபாயம் அதிகளவில் உள்ளது. நீர் சேமிப்பு டேங்குகளை சுத்தப்படுத்திவிட்டு உபயோகியுங்கள்.
ஆண்கள் கவனத்திற்கு:
வீட்டில் இருக்கும் ஆண்கள் முதலில் உள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள். ஏனெனில், தரையில் ஏதேனும் கூர்மையான பொருட்களோ, கனமான பொருட்களோ இருந்தால் ஆபத்தாகி விடும்.
மின்சாரம் வேண்டாமே:
நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
பாதுகாப்புடன் மேற்கொள்ளுங்கள்:
மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
தடுப்பூசிகள் அவசியம்:
அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
எளிமையான உணவு:
இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள்.
கெட்டுப் போன பொருட்கள் வேண்டாம்:
மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான சந்தேகம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் போயிருக்கும். முடிந்தவரையில் எல்லா பாத்திரங்களையும் சுத்தம் செய்து விட்டு உபயோகிக்கவும்.
காப்பீடு அவசியம்:
மூழ்கிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
துணிவே இனி துணை:
இந்தப் வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் உங்கள் கூடவே இருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள். சீக்கிரமே பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்துவிடலாம் கவலை கொள்ளாதீர்கள்!
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications