Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காணமல் போன கண்மாய்கள்… கொலை மிரட்டல் விடுத்த கிரானைட் கொள்ளையர்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மலையை வெட்டி எடுத்து ஏப்பம் விட்ட கிரானைட் குவாரி முதலைகள், கண்மாய்களையும், குளங்களையும் மூடி விவசாயத்தையே அழித்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் சகாயம் ஐ.ஏ.எஸ் நடத்திய நான்காவது கள ஆய்வில் தெரியவந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை கிரானைட் முறைகேடு குறித்து நேற்று நான்காம் கட்ட விசாரணையை மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் சகாயம் நேற்று துவக்கினார்.

அங்குள்ள பிள்ளையார் குளத்தை அவர் ஆய்வு செய்தார். அப்போது குளத்திற்கு தண்ணீர் வரத்துள்ள ஓடைகள், கற்களால் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் தற்போது பிள்ளையார்குளத்தில் தண்ணீர் வரத்து இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சகாயத்திடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இ.மலம்பட்டி பகுதியில் உள்ள ஆதி திராவிடர் காலனிக்கு செல்லக்கூடிய பாதையில் கற்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதையும் அவர் பார்வையிட்டார்.

கிரானைட் கழிவுகள்

கிரானைட் கழிவுகள்

மலம்பட்டி மணியன்பொட்டக்குளத்தை அவர் ஆய்வு செய்தார். குளத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கிரானைட் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் "2.64 எக்டேர் பரப்பு கொண்ட இந்த குளம் எங்கே. அதன் கரை எங்கே. குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்றார்.

அதிகாரிகள் என்ன செய்தனர்

அதிகாரிகள் என்ன செய்தனர்

இதற்கு முன் இருந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன். பொதுப்பணித் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் 10ல் ஒரு பகுதியாக விவசாயம் குறைந்துள்ளது வேதனையாக உள்ளது" என்றார்.

ஆற்றின் பாதை

ஆற்றின் பாதை

விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கிய மணிமுத்தாறு ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டதும், ஆற்றின் நடுவே பனைமரம் உயரத்தில் பல அடி தூரம் வரை 'மெகா' செயற்கை கரை அமைக்கப்பட்டிருந்ததும் சகாயம் ஆய்வில் தெரிந்தது. ஆற்றுக்கு நடுப்பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்ததையும் அவர் ஆய்வு செய்தார்.

மாயமான குளங்கள்

மாயமான குளங்கள்

விசாரணையில் இப்பகுதியில் பாசனத்திற்கு பயன்பட்ட குளங்கள், ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போனது தெரியவந்தன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் அவர்கள் சரியான விவரங்களை தெரிவிப்பதில் தடுமாறினர். இதனால் பொறுமையிழந்த சகாயம் "ஆக்கிரமிப்பு குறித்து சரியான வரைபடங்கள் வரைந்து எனக்கு வழங்க வேண்டும். இதுவரை அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் இப்போதுள்ள நீங்களாவது சரியான விவரங்களை தாருங்கள். கொடுக்கும் விவரங்களை மீண்டும் சரிபார்ப்பேன். அப்போது மாற்றம் இருந்தால் உங்களுக்கு சிக்கல் தான்" என்றார்.

தண்ணீர் இல்லை

தண்ணீர் இல்லை

ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள் ளேன். குவாரிகளை பல அடி ஆழம் வரை தோண்டியதால் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கல. குவாரியில் வெடி வைத்ததால் வீடுகள் சேதமடைந்தன. போலீசில் புகார் அளித்தபோது எங்கள் மீது தான் வழக்கு போட்டனர்" என்றார்.

தலையாரிக்கும் மிரட்டல்

தலையாரிக்கும் மிரட்டல்

தலையாரி சுதந்திரகாந்தியை அழைத்து சகாயம் விசாரித்தார். அப்போது அவர் "வீடுகள் சேதம் அடைந்தது தொடர்பாக விசாரிக்க சென்ற என் மீதும் வழக்கு பாய்ந்தது. ஒன்றரையாண்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டேன்" என்றார்.

பொய்த்துப்போன விவசாயம்

பொய்த்துப்போன விவசாயம்

சருகுவலையப்பட்டி கொத்தாளம் குவாரியில் ஆய்வு செய்த போது விவசாயி ஆனந்த் "25 ஏக்கர் நிலம் இருந்தும் விவசாயம் செய்ய முடியவில்லை. ஓடையில் கிரானைட் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் வரத்து இல்லை" என்றார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

அப்போது வாச்சாம்பட்டி விவசாயி ஐயங்காளை என்பவர் திடீரென சகாயம் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். டிசம்பர் 29ஆம் தேதி இப்பகுதியில் நீங்கள் விசாரணை நடத்திய போது பி.ஆர்.பி., தரப்பினர் ஆக்கிரமித்துள்ளது குறித்து உங்களுக்கு தகவல் சொன்னேன். அதற்காக என் தம்பி மகன் ரேவந்தை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், எஸ்.ஐ., அய்யனார் மிரட்டி அடித்தனர். இன்ஸ்பெக்டர் என்னை 'துப்பாக்கியால் சுட்டு விடுவேன்' என மிரட்டினார் என்றார். "இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்துகிறேன்" என்று ஆறுதல் சொன்னார் சகாயம்.

விஷ பாம்புகள்

விஷ பாம்புகள்

மலம்பட்டி பகுதியில் பல்வேறு பகுதிகள் கிரானைட் கழிவுகள் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து விஷ பாம்புகள் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து மக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் பல நூறு அடி ஆழம் வரை கற்கள் வெட்டி எடுத்த பகுதியில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக உள்ளன" என சகாயத்திடம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்த சந்திவீரன் உட்பட பலர் புகார் கூறினர்.

எச்சரித்த சகாயம்

எச்சரித்த சகாயம்

உப்பாறு பகுதியில் அவர் ஆய்வு செய்தபோது சில விவரங்கள் தெரிவிப்பதில் அதிகாரிகள் தடுமாறினர். அப்போது "இது 'சீரியஸ்' பிரச்னை. நீங்கள் சரியான விவரங்கள் தரவில்லை என்றால் 'ஸ்பெஷல் டீம்' போடச் சொல்வேன். இதுவரை யார் தப்பு செய்துஇருந்தாலும் இனிமேலாவது சரியாக செயல்படுங்கள். இல்லையென்றால் சிக்கல் தான்" என்று எச்சரித்தார்.

படம் பிடித்த நபர்

படம் பிடித்த நபர்

மேலூரை அடுத்த இடையம்பட்டியில் உள்ள கிரானைட் குவாரிகளில், கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் இன்று ஆய்வு செய்து கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் தூரத்தில் நின்று சகாயத்தின் நடவடிக்கைகளை தனது மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

கைது செய்து விசாரணை

கைது செய்து விசாரணை

இதனை சகாயம் கண்டுபிடித்ததை அடுத்து, அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவன், தான் பி.ஆர்.பழனிச்சாமியிடம் வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாகவும், தனது சொந்த ஊர் உசிலம்பட்டி எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக அவன் கூறி பதில்களை அடுத்து மேலூர் போலீசார் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+