தமிழக அரசின் புதிய தலைமை செயலர் சக்திகாந்த தாஸ்?
ராமமோகன் ராவ் தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப்படக் கூடும் என தெரிகிறது. இதனால் மத்திய அரசின் ஆலோசகரும் தமிழக சீனியர் ஐஏஎஸ் அதிகாரியுமான சக்திகாந்த தாஸ் புதிய தலைமை செயலராக நியமிக்கப்படக் கூடும்.
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகரும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளில் சீனியர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான சக்திகாந்ததாஸை நியமிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலராக உள்ள ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ராமமோகன் ராவ் நீக்கம்?
இதனையடுத்து ராமமோகன் ராவை உடனே தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ராமமோகன் ராவை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சக்திகாந்த தாஸ்
இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக உள்ள சக்திகாந்த தாஸ் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பேட்ச் ஐஏஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தவர்; எல்காட் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியவர்.

ஏன் இந்த முடிவு?
அத்துடன் தற்போதைய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் சீனியர் சக்தி காந்த தாஸ். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு; கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் நம்பிக்கைக்குரிய அதிகாரி.

கையில் லகான்
ஆகையால் சக்திகாந்ததாஸை முறைப்படியே தமிழக அரசின் தலைமைச் செயலராக்குவதன் மூலம் தமிழக ஆட்சி அதிகாரத்தை தமது பிடியில் முழுமையாக வைத்துக் கொள்ள முடியும் என்பது மத்திய பாஜக அரசின் விருப்பம் என்கிறது டெல்லி வட்டாரங்கள். ராமமோகன் ராவை பல சீனியர்களை ஓரம்கட்டிதான் ஜெயலலிதா தலைமைச் செயலராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications