சக்தி கிளம்பனும்.. காயத்ரி தனியா கிடந்து தவிக்கனும்.. பிக்பாஸ் குறித்து டிவிட்டிய நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி கிளம்பவேண்டும் காயத்ரி தனியா கிடந்து தவிக்க வேண்டும் என நடிகை ஸ்ரீபிரியா டிவிட்டியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சக்தியும் காயத்ரியும் தாங்கள் இருவரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதைப்போலும் தங்களுக்கு சினிமா இன்டஸ்ட்ரியில் மிகப்பெரிய பெயர் புகழ் இருப்பதை போலும் காட்டி வருகின்றனர்.

இதை வைத்தே இருவரும் பிக்பாஸ் வீட்டில் நாட்டாமை செய்து வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட கமல் ரைசாவிடம் போட்டு வாங்கினார்.

நிதானமிழக்கும் காயத்ரி

நிதானமிழக்கும் காயத்ரி

காயத்ரி கொஞ்சமும் நிதானமின்றி நடந்து கொள்கிறார். ஓவியாவை கட்டம்கட்டி அவருக்கு எதிராக ஒரு குரூப்பை உருவாக்கி ஓவியாவை தனிமைப்படுத்தினார்.

சினிமாக்காரர்களுக்கே பிடிக்கல

சினிமாக்காரர்களுக்கே பிடிக்கல

தகாத வார்த்தைகளால் ஓவியாவை திட்டிய காயத்ரி அவரை ஓரம்கட்டி ஒருவழியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி காரியத்தை சாதித்து விட்டார். காயத்ரியின் நடவடிக்கைகள் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களுக்கே பிடிக்கவில்லை.

கமலையே கண்டித்த காயத்ரி

கமலையே கண்டித்த காயத்ரி

கெட்ட வார்த்தைகள் பேசும் காயத்ரியை கடந்தவாரம் கமல்ஹாசன் கண்டித்தார். அவரையே எதிர்த்து பேசிய அவர், தன்னை பற்றி கமல்தான் தவறாக சித்தரிப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

சக்தி வெளியே போகனும்

சக்தி வெளியே போகனும்

இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய எபிசோடு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீபிரியா இந்த வாரம் சக்திதான் வெளியே போக வேண்டும் என்றும் காயத்ரி பிக்பாஸ் வீட்டிலேயே இருக்க வேண்டும் என டிவிட்டியுள்ளார்.

Bigg Boss Tamil - Sakthi talks abouts Gayathri's elimination-Filmibeat Tamil

தனிமைன்னா என்னன்னு தெரியும்

அப்போது தான் அவருக்கு தனிமை என்றால் என்ன என்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஸ்டேட்டர்ஜி எப்படி என்றும் நடிகை ஸ்ரீபிரியா தனது பதிவில் கேட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress sripriya tweets that Sakthi should go from biggboss house and Gayathri should stay back. Then only she will come to know what is alone she said in twitter.
Please Wait while comments are loading...