ஸ்டாலின் போட்டோவுக்கு கேக் ஊட்டிய சேலம் பாஜகவினர்.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதாக விமர்சனம் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நூதன வழியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சேலம் நகர பாஜகவினர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறதே தவிர, அதிமுக ஆட்சி கிடையாது என ஸ்டாலின் சமீபத்தில் கூறினார். பாஜக கொள்கைகள் அமலாவது குறித்து விமர்சனம் தெரிவித்து ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

Salem BJP executives celebrate Stalin words by cutting cakes

ஆனால், பாஜக ஆட்சி அமைந்துவிட்டதாக கேக் வெட்டி கொண்டாடியதோடு, அதை ஸ்டாலின் போட்டோவுக்கு ஊட்டி விட்டு நூதன வகையில் எதிர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர் சேலம் பாஜகவினர்.

ஸ்டாலின் குறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Salem BJP executives celebrate Stalin words by cutting cakes. They oppose Stalin comment on BJP by this new way.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற