சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்! நேரடியாக பங்கேற்கும் ஸ்டாலின்! அப்படியென்ன ஸ்பெஷல்?
சேலம்: நாளை மாலை சேலத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
பொதுவாக செயல்வீரர்கள் கூட்டம் என்பது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரே கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதன் மூலம் சேலத்தில் நாளை மாலை நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டமானது கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளைய தினம் ஸ்டாலின் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் துரைமுருகனும் கலந்துகொள்கிறார் என்பது கூடுதல் தகவலாகும். இதனிடையே இது தொடர்பாக திமுக தலைமைக்கழக விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் முன்னிலையில், சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், 10-06-2023 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், சேலம், ஐந்து ரோடு, ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும்.

அதுபோது சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications