8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை.. மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் குட்டு!
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று காலை சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்பட உள்ளது. திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது.
இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகி உள்ளது.

6 வழி சாலை
இரண்டு நாட்கள் முன்பு சேலம் - சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு அறிக்கை அளித்தது. இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து இன்று சேலம் சாலை வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள், அறிக்கையில் மாற்றம் இருக்கிறது, இதனால் இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய வேண்டி இருக்கும் என்று கூறினார்கள்.

நிறுத்தம்
ஆனால் மத்திய அரசு தாமாக முன்வந்து சேலம் சென்னை 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்து இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் கடுமையான கேள்விகளை தொடர்ந்து இந்த பதிலை அளித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பணிகளை தொடங்க மாட்டோம் என்றுள்ளது.

மாற்றம் செய்ய முடிவு
மேலும் சேலம் பசுமை வழி சாலை திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. சாலையின் மொத்த அமைப்பையும் மாற்ற வேண்டும். இதனால் சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, என்று பதில் அளித்துள்ளது.

இடைக்கால தடை
மத்திய அரசின் அறிக்கையில் மாற்றம் இருப்பதால், சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 வழி சாலையாக சேலம் சாலையை மாற்ற திட்டமிட்ட பின் அந்த திட்டத்தை அரசு சமர்ப்பிக்க வேண்டும், பின் அதை வைத்தே இடைக்கால தடையில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications