பெற்ற மகளின் தோழியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரன்!
ஆத்தூர்: சேலத்தில் மகளுடன் படித்து வரும் தோழியை ஒருவர் மது அருந்த வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரபத்திரன் . இவரது மகளும், சங்கர் மகளும் தோழிகள். இவர்கள் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள்.
நேற்று மாலை சங்கர் மகள் தனது தோழி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் வீரபத்திரனும், அவரது மகளும் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர் மகள் ஏன் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு வீரபத்திரன், மனைவி வீட்டை பூட்டி விட்டு ஆத்தூர் சென்று விட்டார். சாவி அவரிடம் தான் இருக்கிறது. அவர் வந்தால் தான் வீடு திறக்க முடியும் என்றார். மேலும், வீரபத்திரன் சங்கர் மகளை வண்டியில் அழைத்துக் கொண்டு சாவி வாங்க சென்றுள்ளார்.
முல்லை வாடி பகுதியில் மாலை 6 மணியளவில் வீரபத்திரன் மது, புரோட்டா, குளிர்பானம் ஆகியவற்றை வாங்கினார். தொடர்ந்து அவர் மாணவியை முல்லைவாடி பகுதியில் உள்ள பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வீரபத்திரன் மாணவியை மது குடிக்க சொல்லி செருப்பால் பலமாக முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் மாணவியின் ஆடைகளை கழற்ற சொல்லி தாக்கியுள்ளார். பின்னர் வீரபத்திரன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதோடு இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய காமுகன் வீரபத்திரன், இனி இதே போல் அடிக்கடி வரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். உடல் முழுவதும் காயத்துடன் திரும்பி வந்த மாணவியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வீரபத்ரனைக் கைது செய்து, விசாரணைக்குப்பின்பு மத்திய சிறையில் அடைத்தனர். அம்மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications