ஆவின் கலப்பட வரிசையில் அடுத்த மோசடி – சோம்பு, சீரகத்தில் குச்சி கலந்த குஜராத் வியாபாரி கைது
சேலம்: சேலத்தில் கிட்டதட்ட 500 மூட்டைகளில் உணவுப்பொருட்களான மிளகு, சீரகம், கசகசா, சோம்பு வெந்தயத்தில் கலப்படம் செய்த குஜராத் வியாபாரியின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் நகரிலுள்ள செவ்வாய்பேட்டை சந்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான சந்தைகளுள் ஓன்று.

வட இந்தியாவை சேர்ந்த பலர் இங்கு தானியங்கள் மொத்த விற்பனை செய்து வருகிறார்கள். பலமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்குள்ள மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கிகொண்டுபோய் தங்களுடைய ஊர்களில் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள்.
இங்குள்ள மூலப்பிள்ளையார் கோவில் அருகில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரீத் என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி கொண்டுவந்து இங்குள்ள கடைகாரர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்.
கிரீத், குஜராத்தில் இருந்து மளிகை பொருட்களை வரவழைத்து, அதில் கலப்படம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்துக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அந்த குடோனில் சோதனை நடத்தும்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், உணவுபாதுகப்பு துறை பணியாளர்கள் குழு, சம்மந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த குடோனில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ததில், மளிகை பொருட்களில் பலத்த கலப்படம் இருப்பது தெரியவந்தது.
மிளகு, சீரகம், வெந்தயம், கசகசா, சோம்பு உள்ளிட்டவற்றில், மரக்குச்சிகளையும், பட்டைகளையும் கலப்படம் செய்து வைத்திருந்தனர். 500 மூட்டைக்கும் மேல் இருந்த பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, கலப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர்.
பறிமுதல் செய்த கலப்பட பொருளை, ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை, உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கலப்பட பொருட்களின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய் ஆகும். கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர்.அனுராதா தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications