காணாமல் போனதாய் கருதிய கல்லூரி மாணவிகள் நட்சத்திர ஹோட்டலில் கண்டுபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் காணாமல் போன இரண்டு மாணவிகள் நட்சத்திர விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இங்கு மலேசிய நாட்டைச் சேர்ந்த வெண்டியங் கூல்லிங் , பிரிண்டா லும் என்ற இரு மாணவிகள் 2ஆம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

விடுதிக்கு திரும்பாத மாணவிகள்:

கடந்த சனிக்கிழமை மதியம் மாணவிகள் இருவரும் சேலத்திற்கு சென்று வருவதாக விடுதி கண்காணிப் பாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இரவுவரை இருவரும் விடுதிக்கு திரும்பவில்லை.

காவல் நிலையத்தில் புகார்:

இதனால், விடுதியிலிருந்த சகமாணவிகள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர்களின் போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. விடுதி கண்காணிப்பாளரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

வயர்லஸ் தகவல்:

உடனடியாக வயர்லஸ் மூலமாக மாவட்டம் முழுவதுமுள்ள காவல்நிலையங்களுக்கு வெளி நாட்டு மாணவிகள் காணாதது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல் சந்தேகம்:

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

நட்சத்திர விடுதியில் மாணவிகள்:

இந்நிலையில் மாணவிகளின் செல்போன் மூலமாக கண்டறிந்து மாமங்கம் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஒரு நட்சத்திர விடுதியில் இரு மாணவிகளும் இருப்பது தெரியவந்தது.

போதை ராஜ்ஜியம்:

இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது போதை தெளியாமல் அரை குறை ஆடையில் இருந்துள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்:

இதுகுறித்து மாணவிகளிடம் விசாரித்ததில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஹோட்டலுக்கு வந்ததாகவும், தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

நிர்வாகத்திடம் ஒப்படைப்பு:

இதையடுத்து, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+