கருணை கொலை செய்யும் முன்பாக தானாக உயிரை துறந்த கோவில் யானை ராஜேஸ்வரி! பக்தர்கள் கண்ணீர்
கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்த சேலம் கோவில் யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது.
Recommended Video

சேலம்: கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்த சேலம் கோவில் யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது.
சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான யானை ராஜேஸ்வரி இடது கால் ஊனம் காரணமாக நிற்க முடியாமல் வலதுகால் உதவியுடன் நின்று வந்தது. நாளடைவில் வலது காலிலும் வாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சரிவர நிற்க முடியாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யானை கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

யானையால் எழும்ப முடியவில்லை
இந்த நிலையில் கடந்த மாதம் 5ஆம் தேதி யானை ராஜேஸ்வரி நிற்க முடியாமல் படுத்தது. அதன் பின்னர் யானையால் எழும்ப முடியவில்லை.

படுத்த படுக்கையான யானை
படுத்த படுக்கையான பின்னர் டாக்டர்கள் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். யானை ராஜேஸ்வரிக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய வகையில் தினமும் வெள்ளரி, திராட்சை, குளுக்கோஸ், தர்பூசணி, அன்னாசி பழங்கள், செவ்வாழை ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டு வந்தது.

ஹைகோர்ட்டில் மனு
தொடர்ந்து படுத்த நிலையில் இருப்பதால் யானையின் வலது புற பகுதியில் புண் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து யானையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கருணை கொலைக்கு அனுமதி
இதுதொடர்பாக மருத்துவர்கள் குழு மற்றும் கோவில் நிர்வாகத்திடம் அறிக்கை பெற்ற உயர்நீதிமன்றம் யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய அனுமதி அளித்தது.

யானை ராஜேஸ்வரி மரணம்
இந்நிலையில் உடல்நிலையில் மோசமடைந்ததால் யானை உயிரிழந்தது. யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications