குட் நியூஸ்.. சேலம் டூ பெங்களூர், கொச்சி, ஹைதராபாத்துக்கு விமான சேவை விரைவில் ரெடி!

Subscribe to Oneindia Tamil

சேலம்: உதான் 5.o திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், அங்கிருந்து எங்கே விமானச் சேவை ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட நகரங்களிலும் விமானச் சேவையை மேம்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் உதான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டது.

சேலம் ஏர்போர்ட்: இதற்குப் பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது. இருப்பினும், அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த ஜூன் 2021ஆம் ஆண்டு முதலே சேலம் விமான நிலையத்தில் இருந்து எந்தவொரு விமானமும் இயக்கப்படவில்லை. இதற்கிடையே சேலம் ஏர்போர்ட்டில் இருந்து மீண்டும் விமானங்களை இயக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

 Salem to get Flights directly to Bangalore and Hyderabad, Kochi

இதற்கிடையே இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, செப். மாதம் முதலே சேலம் ஏர்போர்ட்டில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி சேலம் விமான நிலையத்தில் இருந்து உதான் 5.0 திட்டத்தின் கீழ் இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூன்று புதிய ரூட்களில் விமானங்களை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3 புதிய ரூட்கள்: அதன்படி சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு விமானங்களை இயக்க இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முன்னதாக உதான் திட்டத்தின் கீழ் கடந்த 2018 மார்ச் மாதம் முதல் ஜூன் 2021 வரை சென்னை- சேலம் இடையே விமானங்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு சேலத்தில் இருந்து எந்தவொரு விமானமும் இயக்கப்படாத நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சேலம் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் 90% நிறைவடைந்த நிலையில், செப். முதல் வாரத்தில் விமானச் சேவை தொடங்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாகச் சேலம் ஏர்போர்ட்டின் இயக்குநர் ஜி ரமேஷ் கூறுகையில், "பெங்களூரில் இருந்து சேலம் வழியாகக் கொச்சிக்கும்.. மீண்டும் அங்கிருந்து சேலம் வழியாகப் பெங்களூருக்கும் விமானங்களை இயக்க அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு இந்தியன் ஏர்போர்ட் ஆத்தாரிட்டி பணி ஆணைகளை வழங்கியுள்ளது.

இண்டிகோ: அதேபோல ஹைதராபாத்திற்கும் இரு மார்க்கமாக விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் இயக்க உள்ளது. இந்த இரு ரூட்களிலும் செப்டம்பர் தொடக்கத்திலேயே விமானச் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், எந்த தேதியில் விமானச் சேவை தொடங்கப்படும் என்பதைச் சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்கள் அறிவிக்கும்" என்றார்.

உதான் 1.o திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே இப்போது உதான் 5.o திட்டத்தில் சேலம் ஏர்போர்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து உதான் 5 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே ஏர்போர்ட் சேலம் ஆகும்.

 Salem to get Flights directly to Bangalore and Hyderabad, Kochi

கோரிக்கை: சேலத்தில் இருந்து விமானங்களை இயக்க தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தியன் ஏர்போர்ட் ஆத்தாரிட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. இதன் காரணமாகவே இப்போது இரண்டு நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன்வந்துள்ளன. அதேபோல சென்னை- சேலம் இடையேயும் மீண்டும் விமானச் சேவையைக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "சேலத்தில் இருந்து கொச்சிக்கு பல ரயில்கள் உள்ளன. இருப்பினும், விமானச் சேவை வந்தால் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும், மும்பை மற்றும் டெல்லிக்குச் செல்வோர் பெங்களூர் வழியாகச் செல்லவும் இது பெரியளவில் உதவும். இப்போது கோவை அல்லது சென்னைக்குச் சாலை மார்க்கமாக சென்ற மும்பை, டெல்லி போன்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+