அப்பாவான குஷியில் உறவினர்களுக்கு ஸ்வீட் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய வாலிபர், நண்பர் பஸ் மோதி பலி
சேலம்: சேலத்தில் குழந்தை பிறந்த செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்து இனிப்பு கொடுத்துவிட்டு வீடு திரும்பிய வாலிபர் சாலை விபத்தில் பலியானார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் ஏத்தாப்பூரை அடுத்து உள்ள வைத்தியகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் சங்கர்(23). மெக்கானிக். அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தந்தை ஆன மகிழ்ச்சியை உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட சங்கர் தனது நண்பர் விஜயக்குமாருடன்(25) பைக்கில் ஆத்தூருக்கு சென்றார். ஆத்தூரில் உள்ள உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பினார்.
பைக்கை சங்கர் ஓட்ட விஜயக்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். பைக் பெத்தநாயக்கண்பாளையம் அருகே செல்கையில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சங்கரின் பைக் மீது மோதியது. இதில் சங்கர் மற்றும் விஜயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது பற்றி தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications