குறும்பு செய்த 3 வயது மகனுக்கு இரும்புக் கம்பியால் சூடு – தாய் கைது
சேலம்: சேலத்தில் தன்னுடைய மகனுக்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூர் அருகில் உள்ள முல்லைவாடியைச் சேர்ந்தவர் கட்டட கூலித்தொழிலாளி மணிகண்டன். இவரது மனைவி பிரேமா. இவர்களுடைய 3 வயது மகன் அருண்குமார்.
இந்நிலையில் கடன் தொல்லை கழுத்தை நெறித்ததால் ஏழு மாதங்களுக்கு முன்னால் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பிரேமா தனது மகன் அருண்குமாரை அழைத்துக் கொண்டு தன்னுடைய தாயார் லட்சுமி வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் பிரேமா தன்னுடைய மாமனாரைப் பார்க்கச் சென்றார். அப்போது அவருடைய மாமனார் முருகேசன், குழந்தை அருண்குமார் கை, கால்களில் மூன்று இடங்களில் சூடு போடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
இதனைப் பற்றி கேட்டபோது சொல்பேச்சு கேட்காததால் சூடு போட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து முருகேசன் குழந்தையை கெங்கவல்லி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருமகள் பிரேமா மீது போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பிரேமா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications