கள்ளக்காதலுக்கு 'சீனப் பெருஞ்சுவராக' இருந்த கணவன்... கூலிப்படையை வைத்து காலி செய்ய முயன்ற மனைவி!
சேலம்: சேலத்தில் கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி அர்ச்சுனன். இவரை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டுச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனன் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அவரது மனைவி லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் முகத்தை மூடியிருந்த மர்ம நபர்கள் தனது கணவரைக் கத்தியால் குத்திவிட்டு, தான் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாக லட்சுமி கூறினார்.

மேலும், லட்சுமி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரித்தபோது, லட்சுமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கட்டட மேஸ்திரி பழனிசாமி என்பவருக்கு தகாத தொடர்பு இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, லட்சுமி, பழனிசாமியை பிடித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதே நேரத்தில், மர்ம நபர்கள் பறித்துவிட்டுச் சென்றதாகக் கூறிய 5 பவுன் தங்கச் சங்கிலியை லட்சுமி சேலையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னரின் போலீஸாரின் கவனிப்பில் உண்மையைக் கக்கி விட்டார் லட்சுமி.
தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் லட்சுமியும், பழனிசாமியும் சேர்ந்த கூலிப்படையை அமர்த்தி அர்ச்சுனனை கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் தீவட்டிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், கூலிப்படையாக செயல்பட்ட மேலும் இரு நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications